ADDED : ஜூலை 15, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கோரிமேடு, போக்குவரத்து இனஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் இ.சி.ஆர்., சாலையில் ஸ்பீடு கன் மூலம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நகரப்பகுதிகளில் 30 கி.மீ., மேல் செல்ல கூடாது என விதிமுறை உள்ளது. இந்நிலையில், 40 கி.மீ., க்கு மேலும், அதிவேகமாகவும் வந்த இருசக்கர வாகனம். கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயும், கனரக வானங்களுக்கு 2 ஆயிரமும், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என நேற்று ஒரே நாளில் 100 பேர் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதித்தனர்.