ADDED : அக் 26, 2024 06:29 AM

வில்லியனுார்: வில்லியனுாரில் மேற்கு பகுதி எஸ்.பி., தலைமையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வலியுத்தி போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வில்லியனுாரில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவு பொருட்கள் வாங்க குவிந்துவருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், செயின் பறிப்பு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் வில்லியனுார் மாடவீதிகள், மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதியில் மேற்கு பகுதி எஸ்.பி., வம்சிதரெட்டி தலைமையில் மோப்ப நாயுடன் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
மேலும் மாட வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் வைத்துள்ள கடைகளை அகற்றி போக்குவரத்து சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ராஜ்குமார், கீரத்தி வர்மன், சப் -இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, பிரியா, வீரபத்திரன் மற்றும் மேற்கு பகுதி காவலர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்னடர்.