/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வடக்கு சரகத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
/
வடக்கு சரகத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 18, 2024 05:11 AM

புதுச்சேரி : வடக்கு சரகத்தில் துணை ராணுவம் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலால் துறை, போலீசார், துணை ராணுவத்தினருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.வடக்கு சரகபோலீசார், மத்திய ஆயுதப்படையினருடன் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.மேட்டுப்பாளையம் எஸ்.பி., அலுவலகத்தில் துவங்கிய கொடி அணிவகுப்பு பேரணி, குண்டுசாலை, உழவர்கரை, ஜெயா நகர், தட்சிணாமூர்த்தி நகர், வழுதாவூர் சாலை, ராஜிவ்சிக்னல், இ.சி.ஆர்., சாலை வழியாக கருவடிக்குப்பம் அடைந்தனர்.
எஸ்.பி., வீரவல்லவன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வெங்கடாஜலபதி, சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ், அன்சர் பாஷா மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை போலீசார் பங்கேற்றனர். கொடி அணிவகுப்பின்போது, இ.சி.ஆரில் திடீர் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

