/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிழக்கு எஸ்.பி., தலைமையில் போலீசார் கொடி அணி வகுப்பு
/
கிழக்கு எஸ்.பி., தலைமையில் போலீசார் கொடி அணி வகுப்பு
கிழக்கு எஸ்.பி., தலைமையில் போலீசார் கொடி அணி வகுப்பு
கிழக்கு எஸ்.பி., தலைமையில் போலீசார் கொடி அணி வகுப்பு
ADDED : செப் 08, 2025 02:42 AM
புதுச்சேரி: நகரப்பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கிழக்கு எஸ்.பி., ஸ்ருதி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
புதுச்சேரி நகரப்பகுதிகளில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவின் பேரில், கிழக்கு எஸ்.பி., ஸ்ருதி தலைமையில் பெரியகடை, ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதில், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜெய்சங்கர், கார்த்திகேயன், கணேசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். நேரு வீதியில் துவங்கிய கொடி அணிவகுப்பு அண்ணாசாலை, எஸ்.வி.பட்டேல் சாலை, கடற்கரை சாலை, புஸ்சி வீதி வழியாக ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே முடிவந்தது.
கொடி அணிவகுப்பின் போது, சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், யாரேனும் ஈவ்டீசிங் போன்ற பிரச்னைகள் கொடுத்ததால் உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டது.