/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெட்டியார்பாளையத்தில் போலீஸ் கொடி அணி வகுப்பு
/
ரெட்டியார்பாளையத்தில் போலீஸ் கொடி அணி வகுப்பு
ADDED : அக் 27, 2024 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்கள் முக்கிய இடங்களுக்கு வருவதால், குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், புதுச்சேரியில், பல்வேறு இடங்களில், போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ரெட்டியார்பாளையம் போலீசார், இந்திரா சதுக் கத்தில் இருந்து மூலக் குளம் வரை, கொடி அணி வகுப்பு நடத்தினர். இந்த அணி வகுப் பில், மோப்ப நாயை போலீசார் அழைத்து சென்றனர்.
தொடர்ந்து, ரெட்டியார் பாளையம் பகுதியில், சாலையோரத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற வாகனங்கள் மற்றும் விளம்பர பலகைகளை போலீசார் அப்புறப்படுத்தி, சீர் செய்தனர்.