/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெடிகுண்டு மிரட்டல் நபரை பிடிக்க போலீசார் தீவிரம்
/
வெடிகுண்டு மிரட்டல் நபரை பிடிக்க போலீசார் தீவிரம்
ADDED : ஜூலை 11, 2025 04:07 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்களுக்கும் இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
மிரட்டல் வரும் வி.பி.என்., ஐ.டி., வெளிநாட்டில் இருந்து வருவதால், போலீசார் அந்த தகவலை பெறுவது கடினமாக உள்ளது. முக்கிய நபர்களுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டலையே கண்டுபிடிக்க முடியாமல் வெளிநாட்டு உதவியை நாட வேண்டியுள்ளது.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், மற்ற மாநிலங்களை விட சிறப்பாக பணியாற்றி பல்வேறு சைபர் மோசடி வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, பல கோடி ரூபாயை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால், இ-மெயில் வெடிகுண்டு விவகாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை.
இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோது, 'வெடிகுண்டு மிரட்டல் வரும் இ-மெயில் வி.பி.என்., வெளிநாட்டில் இருந்து வருவதால், வெளிநாட்டின் உதவியை நாடியுள்ளோம். அங்கிருந்து நமக்கு தகவல்கள் வந்தால் தான், இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும். இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரை விரைவில் பிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.