தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 2 மொபைல் போன் திருட்டு :போலீசார் விசாரணை 

2 மொபைல் போன் திருட்டு :போலீசார் விசாரணை 

2 மொபைல் போன் திருட்டு :போலீசார் விசாரணை 


UPDATED : மே 18, 2026 10:28 PM

ADDED : மே 18, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 10:28 PM ADDED : மே 18, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டில் 2 மொபைல் போன்கள் மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, இக்னேஸ் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் நத்தானியல் ஜான்,43; தனியார் கம்பெனி ஊழியர். இவரது வீட்டில் வைக்கப்பட்டிந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான இரண்டு மொபைல் போன்கள் கடந்த மார்ச் 20ம் தேதி திடீரென மாயமானது.

இதையடுத்து நத்தானியல் ஜான், அப்போது பணியில் இருந்த வீட்டின் ஊழியரிடம் மொபைல் போன் மாயமானது குறித்து விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நத்தானியல் ஜான் நேற்று முன்தினம் ஒதியஞ்சாலை போலீசில் மொபைல் போன் மாயமானதில் வீட்டில் வேலை செய்யும் பெண் ஊழியர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us