/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயி மீது தாக்குதல் போலீசார் விசாரணை
/
விவசாயி மீது தாக்குதல் போலீசார் விசாரணை
ADDED : ஜன 08, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூரில் விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர், சுந்தரம் நகரை சேர்ந்தவர் கருணாகரன், 46; விவசாயி. இவர் நேற்று முன்தினம் பாகூர் - கன்னியகோவில் சாலையில் உள்ள தனது நிலத்திற்கு சென்று, தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.
அப்போது, பக்கத்து நிலத்தின் உரிமையாளரான முத்து என்பவர்,கருணாகரனை வழிமறித்து திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்தார்.
காயமடைந்த கருணாகரன், பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.