ADDED : ஏப் 14, 2026 06:57 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பேட் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிஷோர்குமார், 20; வேல்ராம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி இரவு தனது கே.டி.எம். பைக்கை, (பி.ஒய் 01 வி.இ. 5278) வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. அவர், கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
