/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை
/
பஸ் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை
ADDED : ஆக 06, 2025 11:34 PM
பாகூர்: தனியார் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபிஷேகப்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வடிவேல், 31; பாகூர் - புதுச்சேரி செல்லும் தனியார் பஸ் மேலாளர். இவர், கடந்த 31ம் தேதி இரவு பணி முடித்து விட்டு, பஸ்சை பாகூர் பங்களா வீதியில் நிறுத்தி விட்டு, அங்கிருந்த திருமண மண்டபத்தில் படுத்திருந்தார்.
அப்போது, திடீரென பஸ்சின் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. உடனே, வடிவேல் மற்றும் பஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது, பஸ்சின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து வடிவேல் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.