தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீக்காயமடைந்தவர் சாவு போலீசார் விசாரணை

 தீக்காயமடைந்தவர் சாவு போலீசார் விசாரணை

 தீக்காயமடைந்தவர் சாவு போலீசார் விசாரணை


ADDED : பிப் 14, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: தீக்காயமடைந்த தனியார் நிறுவன மேலாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காஞ்சிபுரம், எண்ணெய்க்கார தெருவை சேர்ந்தவர் கோபி, 62. இவர், கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். இவரது மனைவி வரலட்சுமி, 59; திருவண்ணாமலை அரசு பள்ளியில் ஆசிரியர்.

கோபி கிருமாம்பாக்கம் போஸ்ட் ஆபீஸ் வீதியில், வாடகை வீட்டில் தங்கி, வேலைக்கு சென்று வந்தார். கடந்த ஜனவரி 30ம் தேதி அதிகாலை கோபி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு, அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி வரலட்சுமி புகார் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us