ADDED : ஜன 02, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாம் அருகே முதியவர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம் சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கலைவாணி. இவரது உறவினர், நெய்வேலியை சேர்ந்த செல்வராஜ், 82; திருமணம் ஆகவில்லை. கலைவாணி வீட்டில் தங்கி, அரியாங்குப்பம் காய்கறி மார்கெட்டில், வேலை செய்து வந்தார்.
குடிப்பழக்கம் உடைய செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு, நோணாங்குப்பம் படகு குழாம் அருகே இறந்து கிடந்தார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.