ADDED : மே 31, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவில் எதிரில் 60 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார், எந்த ஊர், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.