ADDED : நவ 29, 2024 04:07 AM
புதுச்சேரி: உருளையன்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதியில் 3 பைக்குகள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன், 37; கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்து வருகிறார்.இவர் தனது பைக்கை கடந்த 21ம் தேதி காலை புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையம் எதிரே நிறுத்திவிட்டு, சென்றார். பின், மாலை திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
முதலியார்பேட்டை சாய்பாபா வீதியை சேர்ந்தவர் தினகரன், 36. இவர் புதுச்சேரி - கடலுார் சாலையில் உள்ள தனியார் வணிகவளாகம் எதிரே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். பின், திரும்பி வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து இருவரும் கொடுத்த புகார்களின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், கோபாலன் கடை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கார்த்திக்ராஜா, 26, என்பவர், தனது வீட்டின் முன் கடந்த 20ம் தேதி நிறுத்தியிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
