/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விலை உயர்ந்த வாட்ச் மாயம் போலீஸ் விசாரணை
/
விலை உயர்ந்த வாட்ச் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 15, 2025 04:47 AM
புதுச்சேரி : புதுச்சேரி, லாஸ்பேட்டை, சூரியகாந்தி நகரை சேர்ந்தவர் ஆதிகேசவ வேலு,பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற இவர். அவ்வபொழுது புதுச்சேரிக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி, புதுச்சேரிக்கு வந்திருந்த ஆதிகேசவ வேலு, கடந்த ஏப்ரம் 14ம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு திரும்ப சென்றுள்ளார்.
அப்போது, தனது உறவினர்களாக முத்தியால் பேட்டை, திருவள்ளுவர் நகரை சேர்ந்த சிவசங்கரன், கண்ணையன் ஆகியோரிடம் வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆதிகேசவ வேலு, வீட்டிற்கு கண்ணையன் சென்றபோது, வீட்டில் இருந்த பொருட்கள் சிதறியும், பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து, ஆதிகேசவவேலுக்கு தகவல் தெரிவித்து, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் குறித்து கேட்டறிந்தனர். அதில், விலை உயர்த்த மூன்று வாட்ச், 7 கண் கண்ணாடி, 11 வாசனை திரவங்கள் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த பொருட்கள் அனைத்தும் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.