தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவசாயி சாவு போலீசார் விசாரணை

விவசாயி சாவு போலீசார் விசாரணை

விவசாயி சாவு போலீசார் விசாரணை


ADDED : அக் 31, 2025 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2025 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: சோரியாங்குப்பத்தில் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி, வாய்க்காலில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 63; விவசாயி. இவருக்கு, பூங்கொடி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்திக்கு நுரையீரலில் பிரச்னை இருந்து வந்ததால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை 6:00 மணியளவில், சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றங்கரை பகுதியில் உள்ள தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.

வயல்வெளியில் உள்ள வாய்க்கால் தண்ணீரில், கிருஷ்ணமூர்த்தி மூழ்கிய நிலையில் மயங்கி கிடந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

தகவலறிந்த பாகூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பினர். அவரது மகன் சுபகணேஷ், 28, அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us