தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தவறான பண பரிவர்த்தனை போலீசார் விசாரணை

 தவறான பண பரிவர்த்தனை போலீசார் விசாரணை

 தவறான பண பரிவர்த்தனை போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 17, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தனியார் நிறுவன ஊழியர் ஆன்லைன் மூலம் தவறுதலாக பணம் அனுப்பியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் தனியார் கம்பெனி பணியாளர் ஜெயக்குமார், 32. இவர், கடந்த மே மாதம் 13ம் தேதி கம்பெனி வங்கி கணக்கில் இருந்து, மற்றொரு வங்கி கணக்கிற்கு தவறுதலாக 3 லட்சம் ரூபாயை ஆன்லைன் பரிவர்த்தனையில் அனுப்பி விட்டார். இது குறித்து அவர் அதே மாதம் 25ம் தேதி, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்தார்.

போலீசாரால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்ந்து, நவி மும்பையில் உள்ள அந்த வங்கி கிளைக்கு போலீசார் கடிதம் அனுப்பினர். அதன் பேரில், அந்த கணக்கு 'விருந்தாவன் டிரேடிங் கம்பெனி' உரிமையாளர் பிரசாத் சங்கர் கங்கூர்தே என்பவர் பெயரில் இருந்தது தெரிந்தது. மேலும், அவர் வங்கி கணக்கில் இருந்து இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் சுய காசோலை மூலமாகவும், 40 ஆயிரம் ரூபாய் ஏ.டி.எம்., மூலம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us