/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாரி டிரைவர் மாயம் போலீசார் விசாரணை
/
லாரி டிரைவர் மாயம் போலீசார் விசாரணை
ADDED : நவ 26, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியே சென்ற லாரி டிரைவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல் 41, லாரி டிரைவர். இவருக்கு மணிமொழி என்ற மனைவியும், மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஞானவேலுக்கு சாலை விபத்து ஏற்பட்டதில் இருந்து வீட்டில் இருந்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர் கடந்த 22ம் தேதி மாலை வீட்டில் இருந்த வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இவரை உறவினர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மனைவி மணிமொழி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.