ADDED : ஏப் 30, 2026 02:49 AM
புதுச்சேரி: மருத்துவ மாணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்தவர் வனத்துறை அதிகாரி ராமபவுகாய். இவரது மனைவி டாக்டர் மார்த்தா. இவர்களது மகன் கிவிகிகாய், 19. இவர், புதுச்சேரி, தர்மாபுரியில் தங்கி தனியார் மருத்துவக் கல்லுாரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வந்தார்.
நேற்று காலை கிவிகிகாயிடம் போனில் பேச அவரது தாய் அழைத்தார். கிவிகிகாய் போனை எடுக்காததால், சந்தேகமடைந்த மார்த்தா வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு அவர து வீட்டிற்கு சென்று பார்க்க சொன்னார்.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சுரேந்தர், கிவிகிகாய் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் உள்ள அறையில் கிவிக்காய் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவல் அறிந்தவுடன் மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து கிவிகி காய் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பினர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
