/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நள்ளிரவில் ரவுடி வெட்டிக் கொலை போலீசார் விசாரணை
/
நள்ளிரவில் ரவுடி வெட்டிக் கொலை போலீசார் விசாரணை
ADDED : செப் 30, 2025 07:47 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நள்ளிரவில் ரவுடியை கத்தியால் வெட்டி படுகொலை செய்த கும்பல் குறித்து போலீசார் ்விசாரித்து வருகின்றனர்.
நெல்லித்தோப்பு குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி(எ) விக்னேஷ் 27, ஆட்டோ டிரைவர். முன்னாள் நெல்லித்தோப்பு பா.ஜ., தொகுதி தலைவர். பிரபல ரவுடியான இவர் மீது உருளையான்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொலை, வழிப்பறி, அடி தடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் விக்கி நேற்று இரவு 11.30 மணியளவில், அவரது பைக்கில் திருவள்ளுவர் சாலை வழியாக குயவர்பாளையம் வந்து கொண்டிருந்தார். அப்போது நவீனா கார்டன் அருகே வந்தபோது, அவரை பின் தொடர்ந்து பைக், ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் விக்கியை சரமரியாக வெட்டினர். இதில் விக்கி இறந்ததை உறுதிபடுத்திய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
தகவலறிந்த உருளையான்பேட்டை சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகினற்னர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று அதே பகுதியில் நடந்த சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் விக்கியை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட விக்கி (எ) விக்னேஷ்க்கு திருமணமாகி நித்யா என்ற மனைவி, 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.