ADDED : ஏப் 24, 2026 07:15 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, கணேஷ் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் குமார், 39; பெயிண்டர். திருமணம் ஆகாத குமார், கடந்த சில ஆண்டுகளாக இரைப்பை குடல் வீக்கம் பிரச்னையால் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஒரு வாரமாக குமார் வேலைக்கு செல்லாமலும், வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் கழிவறைக்கு சென்ற குமார், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவரது தம்பி ராஜேஷ், கழிவறை கதவை உடைத்து பார்த்தபோது, கழிவறையில் குமார் துாக்கில் தொங்கனார்.
அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
