/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
/
மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
ADDED : நவ 14, 2025 01:56 AM
புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் கல்லுாரி மாணவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எல்லைபிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அலமேலு, 28. இவருக்கு திருமணமாகி கணவருடன் தாய்வீட்டில் வசித்து வருகிறார். இவரது தங்கை மகேஸ்வரி, 21, பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.
இவர், உறவினர் ஒருவரை காதலித்தாக கூறப்படுகிறது. அதற்கு காதலனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மகேஸ்வரி, நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

