/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெல்டருக்கு கத்தி குத்து போலீசார் விசாரணை
/
வெல்டருக்கு கத்தி குத்து போலீசார் விசாரணை
ADDED : அக் 07, 2025 01:20 AM
பாகூர்; கிருமாம்பாக்கம் அடுத்துள்ள மதிக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் 23; வெல்டர். இவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6.00 மணியளவில், மதிக்கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் மது கடையில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது, இவருக்கும், பக்கத்து டேபிளில் மது அருந்தி கொண்டிருந்த கன்னியக்கோவிலை சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
சதீஷ், முருகவேலை கீழே தள்ளி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
பின்னால், பைக்கில் சென்ற முருகவேல், சுள்ளியாங்குப்பம் பால் சொசைட்டி அருகே சதீஷை வழிமறித்து, கத்தியால் முதுகில் குத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். அவரின்அலறல் சத்தம் கேட்டு, பொது மக்கள் திரண்டதால், முருகவேல் அங்கிருந்து தப்பிச் சென்றார். அருகில் இருந்தவர்கள் காயமடைந்த சதீஷ்சை கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் முருகவேல் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.