ADDED : அக் 21, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பேட் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் 27; கூலித் தொழிலாளி. இவரது மனைவி கீர்த்தனா. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள், இரண்டு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
குடும்ப பிரச்னை காரணமாக கீர்த்தனா, கணவரிடம் கோபித்து கொண்டு, கடந்த 16ம் தேதி, பிள்ளைகளுடன் காரைக்காலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால், மனமுடைந்த லட்சுமணன், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் பழனியம்மாள் புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
