/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளம்பெண் தற்கொலை போலீசார் விசாரணை
/
இளம்பெண் தற்கொலை போலீசார் விசாரணை
ADDED : ஆக 08, 2025 02:37 AM
பாகூர்: இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்த குருவிநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி; கூலி தொழிலாளி. இவரது மூன்றாவது மகள் விஜயகுமாரி, 26. இவர், கடலுார் மாவட்டம், கரைமேடு பகுதியைச் சேர்ந்த கனகதுரை என்பவரை காதலித்து, கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இருவரும், இருளன்சந்தை மதுரா, குறிஞ்சி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். விஜயகுமாரிக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 4ம் தேதி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த கனகதுரையை, மனைவி விஜயகுமாரி கண்டித்துள்ளார். இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
விரக்கியமடைந்த விஜயகுமாரி பூச்சி மருந்தை குடித்தார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட விஜயகுமாரி நேற்று முன்தினம் இறந்தார். அவரது தாய் தனலட்சுமி புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விஜயகுமாரிக்கு, திருமணமாகி ஒரு ஆண்டே ஆனதால், வரதட்சணை கொடுமையாக இருக்குமோ என, தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.