ADDED : ஜூலை 07, 2025 01:29 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஆட்டோ டிரைவர் இறந்தார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் காமராஜ், 64; ஆட்டோ ஓட்டி வந்தார். மனைவியை விட்டு பிரிந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
அதனை அடுத்து, வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடன் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
