/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறையில் போன் பேட்டரி போலீசார் விசாரணை
/
சிறையில் போன் பேட்டரி போலீசார் விசாரணை
ADDED : செப் 19, 2024 11:08 PM
புதுச்சேரி: புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகள், வெளி நபர்களுடன் தொடர்பு கொண்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் போலீசார் அவ்வப்போது, கைதிகளின் அறைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, எஸ்.பி.,க்கள் ஜிந்தா கோதண்டராமன், வீரவல்லபன், வம்சித ரெட்டி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று மதியம், 1:00 மணி முதல் மாலை, 3:30 மணி வரை, காலாப்பட்டு மத்திய சிறையில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ள அறைகளில் பொருட்கள் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என தேடிய போது, 1 மொபைல் போன் பேட்டரி, 2 கிராம் ஹான்ஸ் சிக்கியது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.