/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ.8.88 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
/
3 பேரிடம் ரூ.8.88 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
ADDED : ஜன 25, 2024 04:16 AM
புதுச்சேரி : ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என, மூவரிடம் ரூ. 8.88 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் தொடர்ந்து ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்து வருவதால், பொதுமக்களிடம் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என, மர்ம நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி, மூலக்குளம் பிரபு, ரூ. 68 ஆயிரம், குறிஞ்சி நகர் தனசேகரன் ரூ. 7.12 லட்சம், முத்தியால்பேட்டை சரளாதேவி, ரூ. 1.8 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்துள்ளனர்.
இது குறித்து மூவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.