தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்த நபர் யார் போலீசார் விசாரணை

 இறந்த நபர் யார் போலீசார் விசாரணை

 இறந்த நபர் யார் போலீசார் விசாரணை


ADDED : ஏப் 19, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அடையாளம் தெரியாத நபர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, திலாசுப்பேட்டை காமராஜர் சாலையில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர், கடந்த 11ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து, போக்குவரத்து வடக்கு பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை பற்றிய தகவல் தெரிந்தால், 0413 - 2271033 (போக்குவரத்து போலீஸ் - வடக்கு) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us