/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி ஊழியர் சாவு போலீஸ் விசாரணை
/
மாஜி ஊழியர் சாவு போலீஸ் விசாரணை
ADDED : பிப் 20, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஓய்வு பெற்ற சுதேசி மில் சூப்பர்வைசர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
புதுச்சேரி, கதிர்காமம், கெங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 68; ஓய்வு பெற்ற சுதேசி மில் ஊழியர். நீரிழிவு, ரத்த அழுத்தம் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 18ம் தேதி இரவு சாப்பிட்டு படுத்தவர், மறுநாள் 19ம் தேதி காலை கழிவறை செல்லும் வழியில் மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு கதிர்காமம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

