ADDED : ஜன 15, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஜிப்மர் செக்யூரிட்டியின் ஐபேடு திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் இலவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், 34; ஜிப்மர் மருத்துவமனை செக்யூரிட்டியான இவர், கடந்த 8ம் தேதி தனது ஐபேடு மற்றும் ஐபேட் பென்சிலையும் விடுதியில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து விடுதிக்கு சென்றபோது ஐபேடு, ஐபேட் பென்சில் திருடு போயிருந்தது.
இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

