ADDED : பிப் 01, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: வாயில் நுரை தள்ளிய நிலையில் மூதாட்டி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவசங்கர் 43. இவரது தாய் கவுரி 65. இவர் கடந்த சில நாட்களாக மன உலைச்சலில் இருந்து வந்தார். கடந்த 29ம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு படுக்கை அறையில் துாங்கி உள்ளார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது, வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். அவருக்கு அருகில் பூச்சி மருந்து கவர் கிடந்தது.
உடனே, அவரை மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து கிருமாம்பாக்கம் ஏட்டு ராதாகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.