ADDED : செப் 21, 2025 11:20 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் திடீர் நகரை சேர்ந்தவர் நெடுஞ்செழியன், 52; கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வீடு திரும்பததால், சந்தேகமடைந்த, அவரது மனைவி பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடலுார் சாலை, தவளக்குப்பம் தனியார் பெட்ரோல் பங்கு அருகே நேற்று காலை இறந்து கிடந்தார். கையில் சில இடங்களில் காயம் ஏற்பட்டு இருந்தது.
புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். இதில் கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
