/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ம.க., பிரமுகரை வெட்டிய 3 பேருக்கு போலீஸ் வலை
/
பா.ம.க., பிரமுகரை வெட்டிய 3 பேருக்கு போலீஸ் வலை
ADDED : செப் 18, 2025 03:55 AM
காரைக்கால்:காரைக்காலில் கோர்ட்டில் சாட்சி கூறிய பா.ம.க., பிரமுகரை வெட்டிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால், திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் சிவம், 49; பா.ம.க., பிரமுகரான இவர், திருநள்ளாறு கடைவீதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது உறவினர் மகளை அதே பகுதியை சேர்ந்த நந்தா என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்தாக எழுந்த புகாரையடுத்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிந்து நந்தாவை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் சிவம் சாட்சி சொல்ல சென்றபோது ஜாமினில் வந்திருந்த நந்தா, மிரட்டும் நோக்கில் விரல்களை காட்டி சென்றுள்ளார். அன்று இரவு, நந்தாவின் நண்பர்களான திருநள்ளாறு அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்திரசேகரன் மகன் மாதேஷ், அப்துல் ரகுமான், மேலும் ஒருவர் ஆகிய மூவரும், சிவத்தை அரிவாளால் வெட்டினர்.
காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிவத்தை வெட்டிய மூவரும் அரிவாளுடன் பைக்கில் தப்பி சென்ற சி.சி.டி.வி., கேமரா காட்சி வைரலாகியது.
இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிந்து மாதேஷ், அப்துல்ரகுமான், அவரது நண்பர் ஆகியோரை தேடி வருகின்றனர்.