sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டாக்டரிடம் செயின், போன் பறிப்பு 4 பேருக்கு போலீசார் வலை

/

டாக்டரிடம் செயின், போன் பறிப்பு 4 பேருக்கு போலீசார் வலை

டாக்டரிடம் செயின், போன் பறிப்பு 4 பேருக்கு போலீசார் வலை

டாக்டரிடம் செயின், போன் பறிப்பு 4 பேருக்கு போலீசார் வலை


ADDED : அக் 25, 2025 07:01 AM

Google News

ADDED : அக் 25, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சென்னையில் பணியாற்றும் டாக்டரிடம் ரூ. 3 லட்சம் மதிப்பிலான செயின், மொபைல்களை பறித்து சென்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் கலியமூர்த்தி நகரை சேர்ந்தவர் நவீன் குமார், 27; எம்.பி.பி.எஸ்., படித்து விட்டு, இறுதியாண்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒராண்டு இன்டர்ஷிப்பில் பணியாற்றி வருகிறார்.

தீபாவளி விடுமுறைக்காக சிதம்பரத்திற்கு வந்த நவீன்குமார், திரும்ப சென்னைக்கு செல்ல பஸ் கிடைக்காததால், புதுச்சேரி வந்து அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்காக கடந்த 22ம் தேதி இரவு 9:30 மணிக்கு புதுச்சேரி வந்தார்.

பின், பஸ் நிலையம் அருகேயுள்ள அய்யனார் கோவில் வீதியில் உள்ள தனியார் மதுபான கடையில் மது அருந்திய நவீன்குமார், சிகரெட் வாங்குவதற்காக போதையில் வெளியே வந்தார். அப்போது, அங்கிருந்த 4 பேரிடம் அறிமுகமாகி, சிகரெட் கேட்டுள்ளார். அதில் இருந்த ஒருவர் தான் அடையாறு, காசிமேட்டை சேர்ந்த லோகேஷ் என, அறிமுகப்படுத்தி கொண்டு, சிகரெட் கொடுத்தார்.

பின், நவீன்குமார் அவர்களுடன் இணைந்து மது அருந்தியபோது, திடீரென அவர்களுக்குள் போதையில் தகராறு ஏற்பட்டு, நவீன்குமாரை, அந்த 4 பேரும் உருட்டு கட்டைகளால் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த ஒன்றை சவரன் செயின், ஐ போன், ஐபேடு உள்ளிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

நவீன்குமார் அளித்த புகாரின் பேரில், லோகேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us