பஞ்., ஊழியருக்கு கத்தி குத்து 5 பேருக்கு போலீஸ் வலை
பஞ்., ஊழியருக்கு கத்தி குத்து 5 பேருக்கு போலீஸ் வலை
ADDED : மே 23, 2026 03:51 AM
அரியாங்குப்பம்: கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியரை பேனா கத்தியால் குத்திய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் சலீம்,30; அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர். நல்லவாடு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வரும் 25ம் தேதி திருவிழா நடக்கிறது.
திருவிழாவிற்கு லைட் மற்றும் ஒலி பெருக்கி கட்டும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் என் வீட்டு வழியாக ஒலி பெருக்கி கட்டக்கூடாது என வாக்குவாதம் செய்தார். அதில் அதே ஊரை சேர்ந்த சங்கர் என்பவருக்கும், முத்துக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனை சங்கரின் உறவினர் சலீம் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த முத்துகுமார் அவரது ஆதரவாளர்களான சுமன், கிேஷார், லோகநாதன், சதீஷ் ஆகியோர் சேர்ந்து சலீமை தாக்கினர். சுமன் தான் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் சலீமின் உடலில் குத்தினார். படு காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, சலீம் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, முத்துகுமார் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
