தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுற்றுலா பயணியை தாக்கிய 6 பேருக்கு போலீசார் வலை

சுற்றுலா பயணியை தாக்கிய 6 பேருக்கு போலீசார் வலை

சுற்றுலா பயணியை தாக்கிய 6 பேருக்கு போலீசார் வலை


ADDED : செப் 14, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2025 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : புதுச்சேரி, குண்டுபாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிசெல்வன்,45. இவர் தனது உறவினரான திருக்கனுார் ராஜ்குமார் மற்றும் நண்பர்களுடன் கடந்த 7ம் தேதி, சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச்சிற்கு பைக்கில் சென்றார்.

பீச்சில், வாகனம் நிறுத்தும் இடத்தில் பைக்கை சபரி செல்வம் நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கினார். அதில், விபரம் எதுவும் இல்லாதது குறித்து, ஊழியர்களிடம் விளக்கம் கேட்டார். அதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ஊழியர் தரணி உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து, சபரிசெல்வனை தாக்கி, அவரது மொபைல் போனை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்தது.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் ஏட்டு கணபதி வழக்கு பதிந்து, தரணி உட்பட 6 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.

ஈடன் பீச்சில் அட்டகாசம் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வார விடுமுறை தினங்களில் குவிந்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன், பெங்களூரு சுற்றுலா பயணிகள் ஈடன் பீச்சில், காரை நிறுத்தி விட்டு கடலில் குளித்து விட்டு வந்தபோது, கார் கண்ணாடி உடைந்திருந்தது. காரில் வைத்திருந்த பணம், நகைகள் திருடு போயிருந்தது. இது போன்ற சம்பவங்கள் சுற்றுலா பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us