/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 பேரிடம் ரூ.5.19 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
/
4 பேரிடம் ரூ.5.19 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
4 பேரிடம் ரூ.5.19 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
4 பேரிடம் ரூ.5.19 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : ஏப் 12, 2025 09:55 PM
புதுச்சேரி : புதுச்சேரியில், 4 பேரிடம் 5.19 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரை தொடர்பு கொண்ட நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அந்த நபர் அனுப்பிய லிங்க் மூலம் 3.45 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார். இதே போல், புதுச்சேரியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
கரிக்கலாம்பாக்கம் கான் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 98 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். வில்லியனுார் லிதுமினா, என்பவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில், பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, 66 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர்.