/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் கண்ணாடி யை உடைத்த மூவருக்கு போலீஸ் வலை
/
பஸ் கண்ணாடி யை உடைத்த மூவருக்கு போலீஸ் வலை
ADDED : ஜன 23, 2025 05:24 AM
நெட்டப்பாக்கம்: டைமிங் பிரச்னையில் தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த தோப்பு வீராணம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் 32, தனியார் பஸ் டிரைவர். இவர் கடந்த 19ம் தேதி இரவு 9:00 மணியளவில், புதுச்சேரியில் இருந்து கரியமாணிக்கம் நோக்கி பஸ்சை ஓட்டி வந்தார்.இரவு 10.00 மணியளவில் பஸ் கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் வந்தபோது, அங்கு புதுக்கடையைச் சேர்ந்த தனியார் பஸ் செக்கர் பிரியன், 29,மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் கொண்ட கும்பல் பள்ளி அருகில் ஓடி வந்து பீர்பாட்டிலால் பஸ் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடினர்.
டிரைவர் தமிழரசன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, பிரியன் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.