/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளிநாட்டவரை மிரட்டிய இருவருக்கு போலீஸ் வலை
/
வெளிநாட்டவரை மிரட்டிய இருவருக்கு போலீஸ் வலை
ADDED : பிப் 01, 2025 06:21 AM
வானுார் : ஆரோவில் அருகே நாய்கள் பராமரிப்பு மையத்தில் நுழைந்து வெளிநாட்டவருக்கு மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆரோவில்லில் குதிரைப்பண்ணை அருகே தெரு நாய்கள் பராமரிப்பு மையம் உள்ளது. ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஹெய்ன்ஸ், 52; என்பவர் நாய்களை பராமரித்து வருகிறார்.
இதன் அருகில், புதுச்சேரி வி.வி.பி.,நகர் சுப்பையா வீதியை சேர்ந்த ஜெயச்சந்திரன், 63; வீடு உள்ளது.
சில மாதங்களுக்கு முன், பராமரிப்பு மையத்தில் இருந்து வெளியே வந்த நாயை ஜெயச்சந்திரன் தாக்கினார்.
இதனால், ஹெய்ன்ஸ் நேற்று முன்தினம், பாதுகாப்பு மையத்தை சுற்றி வேலி அமைத்தார். அப்போது அங்கு வந்த ஜெயச்சந்திரன் உள்ளிட்ட இருவர், ஹெய்ன்சை ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஹெய்ன்ஸ், அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.