/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
11 பேரிடம் ரூ. 5.23 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
/
11 பேரிடம் ரூ. 5.23 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
11 பேரிடம் ரூ. 5.23 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
11 பேரிடம் ரூ. 5.23 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : மார் 28, 2025 05:06 AM
புதுச்சேரி : பகுதி நேர வேலை எனக்கூறி, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்த புதுச்சேரி நபர், மோசடி கும்பலிடம் ரூ. 3 லட்சம் இழந்தார்.
புதுச்சேரி, கதிர்காமம், ஆனந்தா நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார்.
இதை நம்பிய ஜெயமூர்த்தி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 256 செலுத்தி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்தார்.
அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், அரியாங்குப்பம் கோகுல்ராஜ் 63 ஆயிரம், மூலக்குளம் முகிலன் 15 ஆயிரம், புதுச்சேரி லட்சுமிநாராயணன் 26 ஆயிரம், அரசூர் சந்திரசேகர் 39 ஆயிரம், முதலியார்பேட்டை சண்முகம் 6 ஆயிரம், அரியாங்குப்பம் குரு பிரசாத் 18 ஆயிரத்து 500, லாஸ்பேட்டை ரவி 17 ஆயிரம், புதுச்சேரி லேகா 9 ஆயிரம், ராஜகுமார் 7 ஆயிரம், திப்புராயபேட்டை ஸ்ரீஜா 20 ஆயிரம் என 11 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து 23 ஆயிரத்து 756 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.