/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை
/
ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை
ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை
ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை
ADDED : நவ 11, 2025 11:29 PM
வில்லியனுார்: வில்லியனுார், கண்ணகி நகரை சேர்ந்தவர் சத்யபிரகாஷ், 37.இவர் வீட்டின் தரை தளத்தில் 'ஹாட் சில்லி' என்றஓட்டல் நடத்தி வருகிறார்.நேற்று முனதினம் இரவு 11:00 மணியளவில் சத்தியபிரகாஷ் மற்றும் ஓட்டலில்வேலை செய்யும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அமர்குமார், 22, ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டலுக்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர்,கத்தியால் அமர்குமாரை வெட்டினார். அதனைதடுத்த சத்யபிரகாஷையும் வெட்டிவிட்டு,கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றார்.
படு காயமடைந்த இருவரும் வில்வியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். சத்தியபிரகாஷ் புகாரின் பேரில், வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து, கத்தியால் வெட்டிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.