ADDED : செப் 13, 2026 05:56 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கடைக்கு சென்ற பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குமரகுருபாலன், 45; இவரது மனைவி துர்காதேவி.
இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து கடைக்கு சென்றார். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீ சார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
