புதுச்சேரி விடுதலை நாளையொட்டி போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை
புதுச்சேரி விடுதலை நாளையொட்டி போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை
ADDED : அக் 31, 2024 05:56 AM

புதுச்சேரி : புதுச்சேரி விடுதலை நாள் அணிவகுப்பு இறுதிகட்ட ஒத்திகை நேற்று நடந்தது.
பிரஞ்சுக்காரர்களிடம் இருந்துபுதுச்சேரி விடுதலை பெற்றாலும், கிழூர் வாக்கெடுப்பின்படி கடந்த 1954ம் ஆண்டு நவ., 1ம் தேதி முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது. இந்நாள் புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம் நாளை 1ம் தேதி,கடற்கரை சாலையில் நடக்கிறது.முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார்.இதில், போலீஸ், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்புகள் நடத்தப்படும்.
விடுதலை நாள் விழாவில் பங்கேற்கும் போலீசாரின் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நேற்று காலை நடந்தது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், நாரா சைதன்யா உள்ளிட்டோர் அணிவகுப்பு ஒத்திகையை பார்வையிட்டார்.
