sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீசார் ரோந்து பணி எஸ்.பி., திடீர் ஆய்வு

/

போலீசார் ரோந்து பணி எஸ்.பி., திடீர் ஆய்வு

போலீசார் ரோந்து பணி எஸ்.பி., திடீர் ஆய்வு

போலீசார் ரோந்து பணி எஸ்.பி., திடீர் ஆய்வு


ADDED : நவ 01, 2024 05:48 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருக்கனுார் பகுதியில் போலீசாரின் ரோந்து பணிகளை எஸ்.பி. வம்சித ரெட்டி நேற்றிரவு ஆய்வு செய்தார்.

புதுச்சேரி மேற்கு பகுதி எஸ்.பி., வம்சித ரெட்டி தீபாவளி பண்டிகை முன்னிட்டு குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.பி., வம்சித ரெட்டி நேற்றிரவு 7:40 மணி அளவில் திருக்கனுார் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். திருக்கனுார் - கே.ஆர்.பாளையம் சாலை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசாரிடம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பஜார் வீதி மற்றும் எல்லைகளில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்றிந்தார்.

போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாட்டிற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மீறி யானும் பட்டாசுகள் வெடித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us