தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போலீஸ் உடல் தகுதி தேர்வு: நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை

போலீஸ் உடல் தகுதி தேர்வு: நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை

போலீஸ் உடல் தகுதி தேர்வு: நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : ஜன 31, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2024 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி போலீஸ் ஊர்க்காவல் படை உடல் தகுதி தேர்வை, தனித்தனி பிரிவுகளில் நடத்த, நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக, முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் அவர் மனு அளித்த விபரம்;

புதுச்சேரி காவல் துறையில் ஊர்க்காவல் படையில்,18 வயது முதல் 50 வயது வரை உள்ள இருபாலரும் பயன்பெறும் வகையில், 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த குறிப்பிட்ட வயதுள்ளவர்களின் உடல் தகுதி ஒரே சீராக இருப்பது சாத்தியமற்றது.

பெண்கள் திருமணம் முடித்து குழந்தை பெற்ற நிலையில், உடல்நிலையில் மாற்றம் அடைந்திருப்பர்.

ஆண்களில், 40 வயதை கடந்தவர்களுக்கும் உடல் தகுதியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.அதனால் உடல் தகுதி தேர்வை, இரு பிரிவுகளாக பிரித்து, 18 வயது முதல், 30 வயது வரை உள்ள பெண்களுக்கு ஒரு பிரிவாகவும், 30 வயதுக்கு மேல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு மற்றொரு பிரிவாகவும் நடத்த வேண்டும். இதே குறிப்பிட்ட வயது பிரிவுகளில், ஆண்களுக்கும் தேர்வு நடத்த வழி வகை செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us