/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கிய போலீசார்
/
உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கிய போலீசார்
ADDED : மார் 09, 2024 02:47 AM

புதுச்சேரி: பந்த் போராட்டத்தால் உணவு இன்றி தவித்தவர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் உணவு வழங்கினர்.
புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு அ.தி.மு.க., மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று பந்த் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்தனர். இதனால், சிறிய பெட்டி கடைகள் கூட திறக்கப்படவில்லை.
ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்கள் மருத்துவமனை வாசலில் உள்ள உணவகங்களில் உணவு சாப்பிடுவர். நேற்று பந்த் போராட்டம் காரணமாக உணவகங்கள் அனைத்து மூடப்பட்டு இருந்தது. இதனால் கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.
இதை அறிந்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி, தலைமை காவலர்கள் மணிமொழி, அருண்குமார், ரோஸ்லின்மேரி ஆகியோர் இணைந்து உணவு தயாரித்து மருத்துவமனை எதிரில் பொதுமக்களுக்கு வழங்கினர்.

