/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் மக்கள் மன்ற நிகழ்ச்சி 18 புகார்கள் மீது நடவடிக்கை
/
போலீஸ் மக்கள் மன்ற நிகழ்ச்சி 18 புகார்கள் மீது நடவடிக்கை
போலீஸ் மக்கள் மன்ற நிகழ்ச்சி 18 புகார்கள் மீது நடவடிக்கை
போலீஸ் மக்கள் மன்ற நிகழ்ச்சி 18 புகார்கள் மீது நடவடிக்கை
ADDED : ஏப் 11, 2026 10:28 PM

அரியாங்குப்பம்: புதுச்சேரியில் நேற்று நடந்த மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 18 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்த மக்கள் மன்றத்தில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பங்கேற்று, பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணன், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல, சேதராப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., வம்சீதாரெட்டி, சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., ராகவ், பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் சுருதி கலந்து கொண்டு பொதுமக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்தனர்.
திருபுவனை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி.,க்கள் கதிரவன், சுப்ரமணியன், காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனில் டேனியல் ராஜ், காரைக்கால் தெற்கு பகுதி போலீஸ் ஸ்டேஷனில் சுந்தர் கோஷ், ஏனாம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி.,க்கள் கொய்யோ சிட்டி ராஜூ, வரதராஜன், மாகியில் எஸ்.பி., அனில்குமார் ஆகியோர் மக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் எஸ்.பி., ரச்சனா சிங், தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் நடந்த மக்கள் மன்றத்தில் எஸ்.பி., பக்தவச்சலம் கலந்து கொண்டு, போக்குவரத்து சம்பந்தமான குறைகளை கேட்டறிந்தனர்.
மக்கள் மன்றத்தில், 17 பெண்கள் உட்பட 162 பொதுமக்கள் கலந்து கொண்டனர். 35 புகார்கள் மனுக்கள் பெறப்பட்டு, அதில், 18 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

