ADDED : அக் 24, 2024 06:28 AM

நெட்டப்பாக்கம்,: பண்டசோழநல்லுார் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் சோதனை செய்தனர்.
புதுச்சேரியில் பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட கூல் லிப், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
இதையடுத்து தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட ஆலோசகர் சூர்யகுமார்,நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலையிலான போலீசார் நேற்று போலீஸ் நிலையத்திற்குட்பட்ட் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறாதா என ஆய்வு செய்தனர். தொடர்ந்து பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, புகையிலை பொருட்கள் பயன் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.