/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி சாதி சான்றிதழ் போலீசார் வழக்குப் பதிவு
/
போலி சாதி சான்றிதழ் போலீசார் வழக்குப் பதிவு
ADDED : டிச 13, 2024 06:05 AM
வில்லியனுார்: வில்லியனுார் அருகேபோலி சாதி சான்றிதழ் கொடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வில்லியனுார் அடுத்த அரியூரை சேர்ந்த சிவாசுப்ரமாலு.இவர் தனது தாயாருக்கு புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் வழங்கும்முதியோர் உதவி தொகை பெறுவதற்காக வருவாய்துறை சார்பில் வழங்கப்படும் சாதி, வருவாய் மற்றும் குடியிருப்பு சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தார்.விண்ணப்பித்துடன் அவரது தாயாருக்கு வருவாய் துறை சார்பில் கொடுத்த பழைய சாதி சான்றிதழை வைத்துள்ளார்.வில்லியனுார் தாசில்தார்சேகர், அந்த சாதி சான்றிதழைஆய்வு செய்தபோது, அது போலியானது என தெரியவந்தது.
இது குறித்து தாசில்தார் சேகர் வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில்போலீசார், சிவசுப்ரமாலுமீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

